சனி, 29 செப்டம்பர், 2012

சம்மந்தமில்லா சம்மந்தம்...




நட்டு வச்ச செடியினிலே
பூத்த பூவும் காணலியே
பரிச்ச அந்த பூவையும்   
தலையில வைக்க முடியலயே..

தலையில் முடி முளைக்கும்
முன்பே பூவச்சு அழகு
பாத்தா என பெத்த ஆத்தா...

பாதியிலே வந்ததல்ல பூவுக்கும்
எனக்குமுள்ள அந்த பந்தம்
ஆதியிலே நாவச்ச பூதானே...
 
திருமணம் என்ற சடங்காலே
எனை வந்து சேர்ந்தவனோ
விதி முடிந்து பாதியிலே
என்னை விட்டு போனதாலே...
 
பொறந்ததுல இருந்து வச்ச
பூவை வைக்க இங்கு
தடையும் சொல்லும் மனித
உருவில் மிருகங்களும் உண்டு...

எந்த ஊர் நியாயமென்றே
யாருக்கும் இங்கே தெரியல
தடை போட வருவாங்க  
இங்கு தாராளமாய் நம்மவங்க    
நியாயம் கேட்கத்தான் வாரதில்ல...



===================================================

வியாழன், 27 செப்டம்பர், 2012

தாயின் கடிதம்...





என் அன்பு மகனே..

நீ நலமாக இருக்கிறாயா
  உன்
குடும்பம் மற்றும் சகலசொந்தங்களோடு 

அனைத்து வசதிகளோடும் உனக்கு சொந்தமான வீட்டில்...


நானும் இங்கு நலமே

நீ விட்டுச் சென்ற முதியோர்
விடுதியில்
எனை போன்ற அன்னையர்களோடு...

உன்னை பற்றிய அக்கறை

எனை பற்றியது இன்று நேற்றல்ல 

நீ என் வயிற்றில் கருவானதிலிருந்தே...


இப்போதும் உன் கவலையே

அனுதினமும் வாட்டி எடுக்கிறது

எல்லோரும் உன்னை வசை பாடுவதால்...


பெற்றோர்களை கவனிக்காத

பாவியென்று மற்றவர்கள் உன்னை

பேசுவதால் என் உள்ளம் பதைக்குதடா...


இனியும் யாராவது கேட்டால்
நான் இறந்து விட்டதாக சொல்லிவிடு
இறப்பது என்பது எனக்கொன்றும் இது முதலல்லவே....

எப்போது எனை வெறுத்தாயோ

அப்போதே நான் இறந்துவிட்டேன்
இப்போது இருப்பது வெறும் கூடுமட்டும் தானடா...

என் பேரப்பிள்ளைக்காவது இந்த

ஆண்டவன் நல்புத்தியை கொடுத்து
மனிதனாக இருக்க அருள் புரியவேண்டுகிறேன்...

காரணம் நான் பெற்ற மகனுக்கும்
எனை போன்ற ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாதே என்ற ஒரு அக்கறையில் தான்...

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு

நொடியும் என் அடிவயிறு பற்றி எரிவது
எனக்கு மட்டும்தான் தெரியும் என் அன்புச்செல்லமே...

என்ன பாவம் நான் செய்தேனோ 

இப்பிறவியில் உன்னோடு இருக்கும் பாக்கியத்தை
இழந்துவிட்டேன் அடுத்த ஜென்மத்திலாவது கொடுப்பாயா...

ஆசை மகனே நான் இறந்த பிறகு

உன்னை சுமந்த வயிற்றில் வைத்துவிடு தீயை
அப்படியாவது உன் கோபம் தீருமா என்மேல் எனப்பார்ப்போம்...

ஏதுமறியா என் அப்பாவிமகனே

நான் இறப்பதற்காக வருந்தவில்லையடா பொல்லாத
உலகில் உனைவிட்டு செல்கின்றேனே என்ற கவலைதான்... 


***************************************************************




புதன், 5 செப்டம்பர், 2012

அறிவோமே தாயின் மனநிலை........

நான் பொறந்த காலத்துல
உலகமொன்னும் முன்னேறல
சொத்து பத்து எல்லாமிருந்தும்
அப்பா ஏனோ மூனாவதுக்கு மேலே  
எனையும் படிக்கத்தான் வைக்கல...

செல்ல மகளாய் இருந்ததால்
வீட்டிலேயே இருக்க வைத்தனரே...
வளர்ந்தேன் நானும் காலத்தை போல ...
இவர்தான் கணவர் என்று சொல்லி
கல்யாணமும் இனிதே நடந்தேறியது...

எனைப்போலவே எனக்கும் பெண்
குழந்தை பிறந்தே இனிதாய் அதை
வளர்த்தோம் உயரிய கல்வியோடு...
கணவரும் குழந்தைகளுமே எனது
வாழ்க்கை என்றே ஆகிப்போனது...

ஓய்வென்பதே அறியாமல் ஓடி ஓடி
உ(இ)ழைத்தேன் என் பாதங்களும் தேய
வயதின் முதிர்ச்சியால் நோய்வந்து
எனையும் சேர்ந்து சொந்தங்கள் போல   
பிரியமறுத்து இறுதிவரை என்னுடனே..

திருமணம் செய்து வைத்த மகளை
புகுந்தவீடு அனுப்பிவிட்டு ‘அப்பாடா

என்று சொல்லி ஓரிரண்டு வருஷம் கூட
ஆகவில்லை பாத்துக்கோ உன் பேரனை  
என்றே விட்டுச்சென்றால் என்மகளும் என்னிடம்...

மனதில் சந்தோசம் இருந்தும் ஒத்துழைக்க
மறுக்கின்றன என் வலுவிழந்த உடல்கள்...
என்னை போலவே எத்தனையோ பாட்டிகளும்
இப்படியே இருந்துவிட்டு யாரிடமும் சொல்லாமல்..
புரிந்து கொள்ளுங்களேன் எனதருமை மகள்களே...


======================================================